கொரோனா சிகிச்சை – தனியார் மருத்துவமனை கட்டணம் எவ்வளவு.?

Default Image

கொரோனா பாதிப்பு குறைவாக இருந்தாலும் 10 நாட்களுக்கு மொத்தம் ரூ.2,31,820 வசூலிக்கலாம் என்று பரிந்துரை செய்துள்ளது.

கொரோனா பாதிப்பு குறைவாக இருந்தால் ஒரு நாளைக்கு தனியார் மருத்துவமனைகளில் ரூ.23,182 வசூலிக்கலாம். சிகிச்சை கட்டணத்துடன் உணவு உள்ளிட்டவற்றிக்காக நாள்தோறும் ரூ.9,600 வரை என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனை கட்டண விவரங்களை அரசுக்கு பரிந்துரைத்தது இந்திய மருத்துவ கவுன்சில் தமிழக பிரிவு. கொரோனா பாதிப்பு குறைவாக இருந்தாலும் 10 நாட்களுக்கு மொத்தம் ரூ.2,31,820 வசூலிக்கலாம் என்றும் பரிந்துரை செய்துள்ளது.

கொரோனா பாதிப்பு தீவிரமாக இருந்தால் நாள் ஒன்றுக்கு ரூ.25,377-ஐ வசூலிக்கலாம் என்று தமிழக ஐசிஎம்ஆர் பிரிவு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை கட்டணத்துடன் உணவு உகிள்ளிட்டவற்றிக்கான நாள்தோறும் ரூ.9,600 வரை வசூலிக்கலாம் என தெரிவித்துள்ளது.கொரோனா தீவிரமாக உள்ளவர்களுக்கு 17 நாட்களுக்கு சேர்த்து கட்டணமாக ரூ.4,31,411 வசூலிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்