தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக் கட்டணம்- தமிழக அரசு அரசாணை வெளியீடு..!

Default Image

முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ்,தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் கட்டணத்தை நிர்ணயித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ள நிலையில்,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் பலரும் அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றுவரும் நிலையில்,பொது மக்களின் நலன் கருதி கொரோனா சிகிச்சைக்கான மருத்துவமனை கட்டணத்தை மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தமிழக அரசே ஏற்கும் என்று சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி,கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்கான கட்டணத்தை நிர்ணயித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.அதில்,

கொரோனா சிகிச்சைக்கான கட்டணம்:

  • தீவிரமில்லாத கொரோனா சிகிச்சைக்கு ஆக்ஸிஜன் உதவி இல்லாமல் – ரூ.5000 கட்டணமாகும்.
  • தீவிரமில்லாத கொரோனா சிகிச்சைக்கு ஆக்ஸிஜன் உதவியுடன்- ரூ.15000 கட்டணம் ஆகும்.
  • தீவிர கொரோனா சிகிச்சைக்கு,வெண்டிலேட்டர் வசதியுடன்- ரூ.35000
  • தீவிர கொரோனா சிகிச்சைக்கு,வெண்டிலேட்டர் வசதி இல்லாமல் – ரூ.30000
  • தீவிர சிகிச்சைப் பிரிவில் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய சிகிச்சைக்கு – ரூ.25000 கட்டணமாகும்.

அதன்படி,பொதுமக்களின் சிகிச்சை கட்டணம் முழுதும் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தமிழக அரசே செலுத்தி விடும்.

மேலும்,மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் இல்லாதவர்களுக்கு,தீவிரமல்லாத கொரோனா சிகிச்சைக்கு,A1 & A2 போன்ற உயர்தர மருத்துவமனைகளில்  ஆக்ஸிஜன் உதவி இல்லாமல்,ரூ.7500 மற்றும் A3 to A6 மருத்துவமனைகளில்  ரூ.5000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனவே,தனியார் மருத்துவமனைகள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் பெற்றால்,பொதுமக்கள் 1800 425 3993 / 104 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் 24 X 7 புகார்களை அளிக்கலாம்.

அவ்வாறு,புகார்கள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டால் தமிழக அரசால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 15042025
Today Live 14042025
Meenakshi Thirukalyanam
Nainar Nagendran - Mk Stalin
adam zampa ipl
weather update rain to heat
good bad ugly ajith ilayaraja
Madurai MP Su Venkatesan