சென்னையில் 12,000 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிகிச்சை மையங்கள்..!

Default Image

சென்னையில் 12,000 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிகிச்சை மையங்கள் தயார் நிலையில் இருப்பதாக சென்னை மாநகராட்சி தகவல்.

சென்னையில் 12 ஆயிரம் படுக்கை வசதிகளுடன் கொரனோ சிகிச்சை மையம் தயார் நிலையில் உள்ளதாக சென்னை மாநகராட்சி தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து சென்னையில் 14 இடங்களில் கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

அத்திப்பட்டு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் 4,500 படுக்கை வசதிகளுடன்  கொரோனா சிகிச்சை மையமும், அண்ணா பல்கலைக்கழக மாணவர் தங்கும் விடுதியில் 1,500 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிகிச்சை மையம் தயார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை பல்கலையின்  தரமணி வளாகத்தில் 900 படுக்கையிலும், ஐஐடி வளாகத்தில் 820 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்