#BREAKING: ராணிப்பேட்டை திமுக எம்.எல்.ஏ காந்திக்கு கொரோனா.!
ராணிப்பேட்டை திமுக எம்.எல்.ஏ காந்திக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், கொரோனாவால் தமிழகத்தில் எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதையடுத்து, தற்போது ராணிப்பேட்டை திமுக எம்.எல்.ஏ காந்திக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.இன்று காலை கிருஷ்ணகிரி தொகுதி திமுக எம்.எல்.ஏ செங்குட்டுவனை தொடர்ந்து, வேலூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ கார்த்திகேயனுக்கு கொரோனா உறுதியானது.
இதனால், இன்று ஒரே நாளில் மூன்று திமுக எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 16 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.