உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இந்த வைரஸால் பொருளாதாரம், பங்கு சந்தை உள்ளிட்டவைகள் பாதிப்புகளை சந்தித்து வருகிறது. இதனிடையே கோழிக்கறி, முட்டை சாப்பிட்டால் கொரோனா பாதிப்பு ஏற்படும் என்று சமூக வலைத்தளத்தில் பரவி வரும் வதந்தியால், பொதுமக்கள் சிக்கன் மற்றும் முட்டைகளை தவிர்த்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் இறைச்சி கடைகளுக்கு வராததால் பெரிதும் பாதிப்பு அடைந்துள்ளது. மேலும் கறிக்கோழி, முட்டை கொள்முதல் மற்றும் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளது.
நாமக்கலில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு முட்டைகோழி பண்ணையாளர்கள் சம்மேளனத் தலைவர் வாங்கிலி சுப்பிரமணி, கோழிக்கறி, முட்டை சாப்பிட்டதால் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக பரிசோதனை மூலம் நிரூபித்தால் ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என கூறினார். மேலும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் விற்பனையாகாமல் நாமக்கலில் 15 கோடி முட்டைகள் தேங்கியுள்ளன. மேலும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் 4 கோடி முட்டைகள் தேக்கமடைந்துள்ளதாக தெரிவித்தார்.
இதையடுத்து ரூ.4.50 ஆக இருந்த முட்டை விலை தற்போது ரூ.1.50 ஆக குறைந்ததற்கு வதந்தியே காரணம் என புகார் தெரிவித்தார். மேலும் ஒரு கிலோ ரூ.90 ஆக இருந்த கறிக்கோழி வதந்திகளால் ரூ.50 ஆக குறைந்துவிட்டது என்றும் குற்றம்சாட்டினார். பின்னர் கோழிகளுக்கு கொரோனா தொற்று என தவறான கருத்துகளை பரப்பியவரை கைது செய்து நடவடிக்கை எடுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி என குறிப்பிட்டார். இதனிடையே கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வருவதையும் வாங்கிலி சுப்பிரமணி சுட்டிக்காட்டினார்.
சென்னை : பழம்பெரும் பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ், வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைபாடுகள் காரணமாக சென்னையில் மருத்துவமனையில்…
சென்னை : நடிகை வழக்கில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரில் ஆஜராகவில்லை என்று சென்னை வளசரவாக்கம் போலீசார்,…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான 9வது போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டி பகுதியில்…
சென்னை : நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பெயரில் சென்னை வளசரவாக்கம் போலீசார் சீமான், விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும்…
சென்னை : இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் ”குட் பேட் அக்லி” திரைப்படத்தின் டீஸர் நாளை இரவு…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் - வங்காளதேச அணிகள் இன்று மோதுகின்றன. குரூப் ஏ பிரிவில் இருந்து…