தமிழகத்தில் இன்று 8,944 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒரே நாளில் 8,944 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்த 37 பேர் என மொத்தம் 8,981 பேருக்கு கொரோனா உறுதி செயப்பட்டுள்ளது என்று தமிழக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. நேற்று 6,983 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், இன்று 8,981 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று 1,36,620 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் மட்டும் ஒரேநாளில் 4,531 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 27,76,413 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனவால் மேலும் 8 பேர் உயிரிழந்த நிலையில், இறந்தோரின் எண்ணிக்கை 36,833 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து மேலும் 984 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 27,08,763 ஆக உள்ளது. மேலும், கொரோனா தொற்றுக்கு சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 30,817ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…