கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,683 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று மேலும் இருவர் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளார்கள். ஏற்கனவே 18 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இன்றும் மேலும் 54 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,683 ஆக உயர்ந்துள்ளது. இன்று சென்னையில் மட்டும் 27 பேருக்கு வைரஸ் இருப்பது உறுதியான நிலையில், மொத்தம் பாதிப்பு அங்கு 400-ஐ தொட்டுள்ளது.
இதனிடையே கொரோனா சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று 90 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை மொத்தம் 752 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து வீட்டு கண்காணிப்பில் 23,303 பேர் உள்ளனர். அரசு கண்காணிப்பில் 106 பேர் இருக்கின்றனர். 28 நாட்கள் கண்காணிப்பு முடிந்து 87,159 பேர் வீடு திரும்பியுள்ளார்கள். இன்று மட்டும் 6,954 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் மொத்தம் 65,977 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அதில், 1,683 பேருக்கு கொரோன உறுதியானது. தற்போது கொரோனா வார்டில் 908 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
துபாய் : கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று…
ராமேஸ்வரம் : எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.…
துபாய் : இந்தியா - பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று(பிப்.23) துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான்…
சென்னை : கடந்த வெள்ளிக்கிழமை வெளியான டிராகன் மற்றும் NEEK (நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்), இரு படங்களுமே…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் பிரமாண்டமான 5 வது போட்டி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே…
உத்தரபிரதேசம் : துபாயில் இன்று நடைபெறும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய…