கொரோனா அச்சுறுத்தல் ! சட்டப்பேரவையை ஒத்திவைக்க வேண்டிய அவசியமில்லை – முதலமைச்சர் பழனிசாமி
கொரோனா அச்சுறுத்தலால் தமிழக சட்டப்பேரவையை ஒத்திவைக்க வேண்டிய அவசியமில்லை என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று நடைபெற்று வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் சட்டமன்ற கூட்டத்தொடரை ஒத்திவைக்க பேரவையில் காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்து முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.அவர் பேசுகையில்,கொரோனா அச்சுறுத்தலால் தமிழக சட்டப்பேரவையை ஒத்திவைக்க வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்தார். போதுமான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்படாது .சட்டப்பேரவைக்கு வரும் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது என்று தெரிவித்தார்.