கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா! மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மூடப்பட்டது!

Default Image

கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா பாதிப்பு மிக தீவிரமாக பரவி வருகிறது. இந்த பாதிப்பு முதலில் சீனாவில் ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த நோயின் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து இந்த நோயின் பாதிப்பு மற்ற நாடுகளிலும் பரவி வருகிற நிலையில், அனைத்து நாடுகளிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா இந்தியாவில் பரவி உள்ளதால் பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் வணிக வளாகங்கள், கோவில்கள், தேவாலயங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிற நிலையில், மதுரையில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த, மீனாட்சி அம்மன் கோவில் மூடப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணி வரை கோவிலுக்குள் மக்கள் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், 8 மணிக்கு மேல் மக்கள் வரக்குகூடிய நான்கு வாயில்களும் மூடப்பட்டுள்ளது. 

இதனால் ஆகம விதிகளின்படி வழக்கம் போல் பூஜைகள் நடைபெறும். ஆனால் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அர்ச்சகர்கள் மற்றும் கோவிலில் துப்புரவு பணியில் ஈடுபடக்கூடியவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தேவையான முக கவசம், கைகளை சுத்தம் செய்ய தேவையான கிருமி நாசினிகள் கொடுக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து, மார்ச் 31-ம் தேதி வரை கோவில் நடை மூடப்பட்டிருக்கும் என கூறப்பட்ட நிலையில், பக்தர்கள் கோவிலுக்கு வெளியே நின்றவாறே சுவாமி தரிசனம் செய்கின்றனர். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்