தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு வேகமெடுத்துள்ளது. நீண்ட நாட்களாக கொரோனா பாதிப்பில் தமிழ்நாட்டில் எந்த உயிரிழப்பும் ஏற்படாமல் இருந்த நிலையில், நேற்று முன் தினம் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் முதல் கொரோனா மரணம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக எல்லைகளில் கொரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால், பல இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து உடல் வெப்பநிலை சோதனை செய்யப்படுகிறது. உடல்நலப் பாதிப்பு இருப்பவர்கள் மருத்துவமனைகளுக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.
தற்போது, புதிய கொரோனா குறித்து சென்னையில் அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டியளித்துள்ளார். இது பற்றி அவர் பேசுகையில், ஜே.என்.1 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. தெற்காசிய நாடுகளில் ஜே.என்.1 கொரோனா வைரஸ் பாதிப்பு அதிக அளவில் காணப்படுகிறது.
புதிய கொரோனா உருமாற்றமானது அதிக அளவிலான கூட்டு பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்று கூறினார். மேலும், ஜே.என்.1 வகை கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை. இணைநோய் உள்ளவர்கள், குழந்தைகள், முதியவர்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிய வேண்டும்.
நெல்லை மாவட்டத்தில் அரையாண்டு தேர்வு தேதிகள் அறிவிப்பு..!
புதிய வகை கொரோனா தொற்று குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும், முன்னெச்சரிக்கையாக 25 லட்சம் படுக்கை வசதி தயார் நிலையில் உள்ளது, 2,000 மெட்ரிக் டன் ஆக்சிஜனும் தயார் நிலையில் உள்ளது என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…