எகிறும் புதிய கொரோனா: தமிழக எல்லையில் கொரோனா பரிசோதனை தீவிரம்!

TN coronavirus

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு வேகமெடுத்துள்ளது. நீண்ட நாட்களாக கொரோனா பாதிப்பில் தமிழ்நாட்டில் எந்த உயிரிழப்பும் ஏற்படாமல் இருந்த நிலையில், நேற்று முன் தினம் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் முதல் கொரோனா மரணம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக எல்லைகளில் கொரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால்,  பல இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து உடல் வெப்பநிலை சோதனை செய்யப்படுகிறது. உடல்நலப் பாதிப்பு இருப்பவர்கள் மருத்துவமனைகளுக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

தற்போது, புதிய கொரோனா குறித்து சென்னையில் அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டியளித்துள்ளார். இது பற்றி அவர் பேசுகையில், ஜே.என்.1 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. தெற்காசிய நாடுகளில் ஜே.என்.1 கொரோனா வைரஸ் பாதிப்பு அதிக அளவில் காணப்படுகிறது.

புதிய கொரோனா உருமாற்றமானது அதிக அளவிலான கூட்டு பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்று கூறினார்.  மேலும், ஜே.என்.1 வகை கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை. இணைநோய் உள்ளவர்கள், குழந்தைகள், முதியவர்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிய வேண்டும்.

நெல்லை மாவட்டத்தில் அரையாண்டு தேர்வு தேதிகள் அறிவிப்பு..!

புதிய வகை கொரோனா தொற்று குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும், முன்னெச்சரிக்கையாக 25 லட்சம் படுக்கை வசதி தயார் நிலையில் உள்ளது, 2,000 மெட்ரிக் டன் ஆக்சிஜனும் தயார் நிலையில் உள்ளது என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்