இனி குறுஞ்செய்தி மூலம் கொரோனா பரிசோதனை முடிவுகளை பெறலாம் – அமைச்சர் விஜயபாஸ்கர்
கொரோனா பரிசோதனை முடிவுகளை குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கும் நடைமுறையை தொடங்கி வைத்தார் அமைச்சர் விஜயபாஸ்கர்
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கொரோனா வைரஸ் பரிசோதனை முடிவுகளை குறுஞ்செய்தி மூலம் அறியும் திட்டத்தை சுகாதாரத்துறை அமைச்சர் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். இதனையடுத்து பேசிய அமைச்சர், கொரோனா வைரஸை ஒட்டுமொத்தமாக ஒழிக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்றும் முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியை பின்பற்றினால் மட்டுமே தொற்றிலில் இருந்து தற்காத்து கொள்ள முடியும் என்று கூறியுள்ளார்.
மேலும், சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தாலும், கட்டுக்குள்தான் உள்ளது. கொரோனா பரிசோதனை செய்து கொள்வோரின் தொலைபேசிக்கு 24 மணி நேரத்தில் குறுஞ்செய்தி மூலம் பரிசோதனை முடிவுகள் அனுப்பும் திட்டம் இன்று தொடக்கி வைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.