கொரோனா பரிசோதனை.. தென் கொரியாவில் இருந்து தமிழகம் வந்தடைந்த பிசிஆர் கருவிகள்!
தமிழகத்தில் கொரோனா பரிசோதனைக்காக, தென் கொரியாவில் இருந்து கூடுதலாக ஒரு லட்சம் பிசிஆர் கருவிகள் சென்னை வந்தடைந்தது.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. நாள் ஒன்றுக்கு சராசரியாக 4000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் அதிகபட்சமாக, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க தமிழக சுகாதாரத்துறை பிசிஆர் கருவிகளை வாங்க திட்டமிட்டனர். இதன்காரணமாக, தென் கொரியாவில் இருந்து கூடுதலாக ஒரு லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்தடைந்தது. இதுவரை 10 லட்சம் பிசிஆர் கருவிகள் வாங்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், ஏற்கெனவே 5.6 லட்சம் பிசிஆர் கருவிகள் இருப்பில் உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.