இன்று முதல் இவர்களுக்கு கொரோனா பரிசோதனை..!
தமிழ்நாட்டுக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு இன்று முதல் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தென்கொரியா, ஹாங்காங் ஆகிய நாடுகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு இன்று முதல் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மேலும், மருத்துவ நிறுவனங்கள் தடுப்பூசி தயாரிப்பதை நிறுத்தியுள்ளதால் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லை என்றும், ஏற்கனவே முந்தைய கொரோனா காலகட்டத்தில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளது. எனவே பொதுமக்கள் இது குறித்து அச்சப்பட தேவையில்லை என்றும் அறிவுறுத்தியுள்ளார்.