மீண்டும் புதுச்சேரி முதல்வர் மற்றும் எம்.எல்.ஏ க்கு கொரோனா பரிசோதனை!

Default Image

புதுச்சேரியின் எம்.எல்.ஏ ஜெயபால் என்பவருக்கு கொரோனா உறுதியாகியதையடுத்து, அம்மாவட்டத்தின் முதல்வர் மற்றும் எம்எல்ஏக்களுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

கொரானா வைரஸின் தாக்கம் நாடு முழுவதும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே தான் செல்கிறது. இதனால் தமிழகத்தில் சில அமைச்சர்களும் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி புதுச்சேரியில் உள்ள சட்டமன்ற வளாகத்தில் முதல்வர், அமைச்சர், எம்எல்ஏக்கள் என அனைவருக்குமே கொரானா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் சட்டப்பேரவையில் கலந்துகொண்ட என் ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ ஜெயபாலுக்கு கொரோனா தொற்று உறுதியாகி அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனால் அதில் கலந்து கொண்ட முதல்வர், சபாநாயகர், அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் என அனைவருக்குமே சட்டமன்ற கமிட்டி அறையில் வைத்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. எம்எல்ஏவுக்கு கொரோனா இருந்தது உறுதியாதை தொடர்ந்தே பல எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் தங்களை தாங்களாகவே தனிமைப்படுத்திக் கொண்டனர். தற்போது அனைவரும் பரிசோதனையும் மேற்கொண்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today live 05 03 2025
blue ghost mission 1
Singer Kalpana
South Africa vs New Zealand
Rajinikanth watched Dragon
Southern Railway
Sivaji Ganesan's house