சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை – சபாநாயகர் தனபால்

சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை என்று சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் வரும் 14-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்குகிறது.கொரோனா பரவல் காரணமாக சென்னை கலைவாணர் அரங்கத்தில் கூட்டத் தொடரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து பேரவைத் தலைவர் தனபால் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் 3 நாட்களுக்கு நடைபெறுகிறது என அறிவிக்கப்பட்டது. 14-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி நடைபெறுகிறது என்று அறிவிக்கப்பட்டது.
இதன் பின்னர் சபாநாயகர் தனபால் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் 72 மணிநேரத்திற்கு முன் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். 11-ஆம் தேதி தலைமை செயலகத்திலும் சட்டமன்ற உறுப்பினர்களின் விடுதியிலும் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
‘அந்த இடத்திற்கு செல்லாததால் தப்பிய தமிழர்கள் 68 பேர்’ – சுற்றுலா சென்ற மதுரை நபர் சொன்ன தகவல்.!
April 23, 2025
பயங்கரவாத தாக்குதலில் தமிழர் சந்துரு சிக்கினாரா.? நடந்தது என்ன? மனைவி கொடுத்த விளக்கம்.!
April 23, 2025