நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் கொரோனா பரிசோதனை – சென்னை மாநகராட்சி
சென்னையில் நட்சத்திர ஹோட்டல்களில் திருமண நிகழ்ச்சிகளில் கலந்து அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய சென்னை மாநகராட்சி உத்தரவு.
ஐடிசி சோழா ஹோட்டலில் பணிபுரியும் 85 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருந்த நிலையில் சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இதனால், கடந்த 10 நாட்களுக்குள் நட்சத்திர ஹோட்டல்களில் திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.