கொரோனா பரவல் – மக்களே விழிப்புடன் இருங்கள் : விஜயகாந்த்
தமிழக அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜயகாந்த் வலியுறுத்தல்.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், இதனை தடுக்க தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தமிழகம் முழுவதும் இனிமேல் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறும் தவறும் பட்சத்தில் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கொரோனா பரவல் மிக தீவிரமாக இருந்த கால கட்டத்தில் பல்வேறு பிரச்சனைகளை நாம் எதிர்கொண்டதை மக்கள் நினைவில் வைத்து கொள்ள வேண்டும். எனவே மக்கள் அனைவரும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
தமிழக அரசும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.’ என தெரிவித்துள்ளார்.
தமிழக அரசும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் #கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். (2-2) pic.twitter.com/bRYyzjfhTN
— Vijayakant (@iVijayakant) June 27, 2022