350 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு மருத்துவமனையை பார்வையிடும் தமிழக முதல்வர்!
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தவிர்ப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தடுப்பு நடவடிக்கைகள் நாடுமுழுவதும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழத்தில் இதுவரை 35 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதியாகியுள்ளது. தமிழகத்திலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்து வருகிறது.
இந்நிலையில் சென்னை ஓமந்தூரில் கொரோனா சிகிச்சைக்காக உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவமனையினை இன்று மாலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட உள்ளார். இங்கு கொரோனா சிறப்பு சிகிச்சைக்காக 350 படுக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை இன்று மாலை முதல்வர் திறந்து வைத்து செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.