சென்னையில் கொரோனா நிலவரம்.! ராயபுரத்தில் 3000-ஐ தாண்டியது.!

சென்னையில் உள்ள 15 மண்டலங்களின் கொரோனா பாதிப்பு பட்டியலை சென்னை மாநகராட்சி தற்போது வெளியிட்டு உள்ளது.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,286 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்தது. இதனால், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25,872 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் நேற்று 1,012 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 17,597 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று கொரோனாவுக்கு 11 பேர் உயிரிழந்த நிலையில், மொத்தம் பலி எண்ணிக்கை 208 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் உள்ள 15 மண்டலங்களின் கொரோனா பாதிப்பு பட்டியலை சென்னை மாநகராட்சி தற்போது வெளியிட்டு உள்ளது. அதில், 15 மண்டலங்களில் 7 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு 1000-ஐ தாண்டியுள்ளது. தொடர்ந்து ராயபுரம் மண்டலம் தான் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ளது. அங்கு, பாதிப்பு எண்ணிக்கை 3,224 ஆக அதிகரித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, கோடம்பாக்கம் மண்டலத்தில் 2029 பேரும், திரு.வி.க. நகரில் 1798 பேரும், தேனாம்பேட்டையில் 2014 பேரும், தொண்டியார்பேட்டையில் 2093 பேரும், அண்ணா நகரில் 1525 பேரும் மற்றும் அடையாறில் 1007 பெரும் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர். சென்னையில் தற்போதைய பாதிப்பு எண்ணிக்கை 17598 ஆக உள்ளது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
வணிக பயன்பாட்டுக்கான LPG சிலிண்டர் விலை உயர்வு.!
March 1, 2025
நடிகை வழக்கில் தொண்டர்கள் திரள் நடுவில் காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்!
February 28, 2025
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025