பண்டிகை காலத்தில் கொரோனா பரவுதலுக்கு மீண்டும் வழிவகை செய்யக் கூடாது – ராதாகிருஷ்ணன்
பண்டிகை காலத்தில் கொரோனா மீண்டும் பரவுவதற்கு வழிவகை செய்துவிடக்கூடாது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து கொண்டே வரும் சூழலில், கடந்த சில நாட்களாக அது படிப்படியாக குறையத் தொடங்கியது.
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸின் பரவல் 50 சதவீதமாக குறைந்துள்ளதாகவும், இறப்பு விகிதமும் படிப்படியாக குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். மேலும், பண்டிகை காலத்தில் கொரோனா மீண்டும் பரவுவதற்கு வழிவகை செய்துவிடக்கூடாது எனவும் அறிவுறுத்தினார்.