“மிளகு ரசம், பூண்டு ரசத்தை சாப்பிட்டால் கொரோனா ஓடிவிடும்” – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!
மிளகு ரசம், பூண்டு ரசத்தை சாப்பிட்டால் கொரோனா ஓடிவிடும் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கருத்து தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி தொகுதியில் இரண்டு இறங்களில் இன்று அம்மா மினி கிளினிக் தொடக்க விழா நடைபெற்றது. இதில் பால்வளத்துறை அமைச்சர் மற்றும் விருதுநகர் மாவட்ட மேற்கு மாவட்ட கழக செயலாளர் ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டு, அம்மா மினி கிளினிக்கை தொடங்கி வைத்தார்.
அதன்பின் பேசிய அவர், மிளகு ரசம், பூண்டு ரசத்தை சாப்பிட்டால் கொரோனா ஓடிவிடும் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கருத்து தெரிவித்துள்ளார். உலகளவில் கொரோனா பரவத்தொடங்கிய பொது மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம்பால் மேக்வால், அப்பளம் சாப்பிட்டால் கொரோனா தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது, குறிப்பிடத்தக்கது.