தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு பொது இடங்களில் இனி மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் வசூலிக்க உத்தரவிட்டுள்ளதாக நேற்று முன்தினம் மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவித்திருந்தார்.
இந்நிலையில்,சென்னை ஐஐடியில் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி,அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் அனுப்பியுள்ளார்.மேலும், அக்கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:
“அனைத்து கல்வி நிலையங்கள்,அலுவலகங்கள் என கூட்ட நெரிசல் உள்ள இடங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.அதே சமயம்,கூட்ட நெரிசல் உள்ள பகுதிகளுக்கு மக்கள் சென்று வரும் நிலையில்,கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும், மேலும்,அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் கட்டாயம் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் .
இதனையடுத்து,கொரோனா பரிசோதனை முடிவு வரும் வரை சம்மந்தப்பட்டவர் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.அதே சமயம்,மாவட்ட அளவில் கொரோனா தொற்று பரவல் எண்ணிக்கையை கண்காணிக்க வேண்டும்”,என உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா பரவல் அதிகரிப்பை கருத்தில் கொண்டு அதனைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக மருத்துவத்துறை செயலாளர்,பேரிடர் மேலாண்மைதுறை செயலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் நாளை முக்கிய ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை : கேரளா மாநிலம் கொச்சினில் இருந்து கோவைக்கு சமையல் எரிவாயு எடுத்து வந்த டேங்கர் லாரியானது கோவை அவினாசி…
சென்னை : ஆண்டுதோறும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை வழங்கும்.…
சிட்னி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில்…
சென்னை: இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 10 ஆம் தேதி விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும் என முன்னதாக…
கர்நாடகா: கர்நாடக மாநிலத்தில் அரசு பேருந்து கட்டணம் 15% உயர்த்தப்படுவாக அம்மாநில போக்குவரத்துத்துறை அறிவித்துள்துய. அனைத்து மாநில சாலை போக்குவரத்து…
சென்னை: இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'டிராகன்' படத்தின் முதல் சிங்கிளான "Rise Of Dragon"…