கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு – முதல்வர் அறிவிப்பு…!

Default Image

கொரோனா பரவல் குறைந்துள்ளதை தொடர்ந்து கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் அரசியல் மற்றும் கலாச்சார கூட்டங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நாளை முதல் நீக்கம் செய்யப்படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் அவர்களது வழிகாட்டுதலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் காரணமாக கொரோனா நோய்த் தொற்று பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டும், மக்களின் இயல்பு வாழ்க்கை முழுமையாக மீள திரும்புவதற்கு ஏதுவாக

இதுவரை நடைமுறையில் இருந்து வந்த சமுதாய கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை 3-3-2022 முதல் நீக்கப்படுகிறது. மேலும், தொற்றுப் பரவலை கட்டுக்குள் வைத்திட 3-3-2022 முதல் 31-3-2022 வரை கீழ்க்கண்ட செயல்பாடுகள் கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்படுகிறது.

1. திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் 500 நபர்களுக்கு மிகாமல் நடத்த அனுமதிக்கப்படும்.

2. இறப்பு சார்ந்த நிகழ்வுகள் அதிகபட்சம் 250 நபர்களுடன் நடத்த அனுமதிக்கப்படும். மேற்சொன்ன இரண்டு கட்டுப்பாடுகள் தவிர்த்து கொரோனா நடவடிக்கைகளுக்காக விதிக்கப்பட்டிருந்த இதர தடுப்பு கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்படுகின்றன.

மக்களின் வாழ்வாதாரம் கருதி அரசால் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து கட்டாயம் மக்கள் முகக் கவசம் பொது இடங்களில் அணிந்து, சமூக இடைவெளியினை கடைபிடிக்க வேண்டும். மேலும் இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் இரண்டு தவணை தடுப்பூசியினை செலுத்திக் கொள்ளுமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

go

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்