இன்று முதல் ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் ரூ.2 ஆயிரம் ரொக்கப் பணம் விநியோகம் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தேர்தலின் போது திமுக ஆட்சிக்கு வந்தால் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 வழங்கப்படும் என்றும், கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3-ம் தேதி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி திமுக ஆட்சிக்கு வந்ததும் முதலமைச்சரான மு.க.ஸ்டாலின் தனது முதல் கையெழுத்தாக நிவாரண நிதி வழங்கும் கோப்பில் கையெழுத்திட்டார்.
கொரோனா அதிகமாக பரவும் சூழலில் இந்த மாதமே முதல் தவணையாக ரூ.2000 வழங்குமாறு உத்தரவிட்டார். அதன்படி தலைமைச் செயலகத்தில் கடந்த 10-ஆம் தேதி, 7 பயனாளிகளுக்கு தலா ரூ.2,000 வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் டோக்கன் வழங்கி அதன் அடிப்படையில் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது.
கடந்த 4 நாட்களாக அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேதியில் வந்து, ரேஷன் கடைகளில் ரொக்கப் பணத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் இன்று முதல் ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் ரூ.2 ஆயிரம் ரொக்கப் பணம் விநியோகம் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…