ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண நிதி ரூ.2,000 வழங்கும் பணிகள் தொடக்கம்…!

Default Image

இன்று முதல் ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் ரூ.2 ஆயிரம் ரொக்கப் பணம் விநியோகம் விநியோகிக்கப்பட்டு வருகிறது.  

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தேர்தலின் போது திமுக ஆட்சிக்கு வந்தால் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 வழங்கப்படும்  என்றும், கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3-ம் தேதி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி திமுக ஆட்சிக்கு வந்ததும் முதலமைச்சரான மு.க.ஸ்டாலின் தனது முதல் கையெழுத்தாக நிவாரண நிதி வழங்கும் கோப்பில் கையெழுத்திட்டார்.

கொரோனா அதிகமாக பரவும் சூழலில் இந்த மாதமே முதல் தவணையாக ரூ.2000 வழங்குமாறு உத்தரவிட்டார். அதன்படி தலைமைச் செயலகத்தில் கடந்த 10-ஆம் தேதி, 7 பயனாளிகளுக்கு தலா ரூ.2,000 வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கும்  டோக்கன் வழங்கி அதன் அடிப்படையில் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது.

கடந்த 4 நாட்களாக அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்ட நிலையில்,  அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேதியில் வந்து, ரேஷன் கடைகளில் ரொக்கப் பணத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் இன்று முதல் ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் ரூ.2 ஆயிரம் ரொக்கப் பணம் விநியோகம் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்