கொரோனா நிவாரணம்: பள்ளிக்கல்வித்துறை சார்பில் 70 கோடி நிதியுதவி – செங்கோட்டையன்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக நிவாரண நிதிக்கு பொதுமக்கள் தங்களால் முடிந்த நிதியினை வழங்குமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்து இருந்தார். இதையடுத்து பலர் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு தங்களால் இயன்ற நிதி உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு நிவாரணம் நிதியாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் ரூ.70 கோடி வழங்குவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களின் ஒருநாள் ஊதியமான ரூ.70 கோடி கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.