தமிழகத்தில் ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா உறுதி.!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இன்று காலையில் 7 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் 50 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனால் ஒரே நாளில் 57 பேருக்கு வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் தமிழகத்தின் இதுவரை கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது.
இதனிடையே டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களில் 1,131 பேர் தமிழகம் வந்துள்ளனர். அதில் 515 பேர் மட்டுமே தற்போது கண்டறியப்பட்டுள்ளனர் என பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். மேலும் மீதமுள்ள 616 பேர் தாங்களாகவே முன்வந்து மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொள்ளவும் என்றும் கொரோனா பாதிப்புள்ள 50 பேரில் 45 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட அனைவரும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, சென்னை மற்றும் நாமக்கலில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளித்து வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.