கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை.! ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க டோக்கன்கள் விநியோகம்.!

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக ரேஷன் கடைகளில் செப்டம்பர் மாத அத்தியாவசிய பொருட்களை வாங்குபவர்களுக்கு இன்று முதல் டோக்கன்கள் விநியோகிக்கப்படுகின்றன.
கொரோனா தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ரேஷன் கடைகளில் கூட்டம் கூடாமல் தவிர்ப்பதற்காக பொருட்களை வாங்குபவர்களுக்கு டோக்கன்கள் விநியோகிக்கப்படுகின்றன. அந்த வகையில் செப்டம்பர் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்களை ரேஷன் கடைகளில் வாங்குபவர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
நாளொன்றுக்கு 200 நபர்கள் என்ற முறையில் இன்று தொடங்கி செப்டம்பர் 1 ஆம் தேதி வரை வீடு வீடாக சென்று டோக்கன்கள் விநியோகிக்கப்பட உள்ளது. மேலும் ரேஷன் கடைகளில் பொருட்களை செப்டம்பர் 3 ஆம் தேதி முதல் கொடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு வரை.!
April 8, 2025
திருடப்படும் தகவல்…சீன சிப்செட் அச்சுறுத்தல்! இந்தியாவில் பழைய சிம் கார்டுகளை மாற்ற திட்டம்?
April 8, 2025
காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது.., மழைக்கு வாய்ப்பு இருக்குதா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!
April 8, 2025