கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்ய 17-ஆம் தேதி முதல் தமிழக முதலமைச்சர் பழனிசாமி மீண்டும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனிடையே தமிழக முதலமைச்சர் பழனிசாமி மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.
இந்நிலையில் கொரானா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வரும் 17 ஆம் தேதி முதல் 21- ஆம் தேதி வரை திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தருமபுரி, கரூர் ஆகிய மாவட்டங்களில் ஆய்வு செய்கிறார்.கொரோனா தடுப்பு பணிகள் குறித்து வரும் 17-ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டத்திலும்,20-ஆம் தேதி வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தர்மபுரி மாவட்டங்களிலும் ,21-ஆம் தேதி கரூர், நாமக்கல் மாவட்டங்களில் முதலமைச்சர் பழனிசாமி நேரில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
பெர்த் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில்…
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 22] எபிசோடில் விஜயா செய்த காரியத்தை அண்ணாமலையிடம் கூறும் முத்து.. அண்ணாமலை எடுத்த…
சென்னை : சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை செல்லும் 28 மின்சார ரயில்கள் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று(22.11.2024)…
திருநெல்வேலி : மாவட்டத்தில் இன்று அதிமுக கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் இந்த ஆய்வு…
சென்னை : தமிழ் தேசியத்தை முன்வைத்து அரசியல் செய்து வரும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு சமயத்தில் நடிகர் ரஜினிகாந்த்…
சென்னை : பிரபல நடிகை சீதா சென்னை விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் வைத்திருந்த இரண்டரை…