கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்.! முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை தொடங்கியது.!
தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.
அண்டை நாடுகளில் மீண்டும் கொரோனா அதிகரிக்க தொடங்கியதன் காரணமாக மத்திய அரசு மாநில அரசுகளுக்கு இதற்கான விழிப்புணர்வையும், வழிகாட்டு நெறிமுறைகள் குறித்தும் அறிவுறுத்தியது.
இந்நிலையில் தற்போது, சென்னையில் தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், தலைமை செயலர் இறையன்பு, உள்துறை செயலர் பணீந்திர ரெட்டி, காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு, சுகாதாரத்துறை செயலர் செந்தில்குமார், பொது சுகாதாரதுறை செயலர் செல்வ விநாயகம் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
அடுத்து புத்தாண்டு, பொங்கல் என பண்டிகை தினம் வருவதால், அப்போது, கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றுவது, அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது, மருத்துவ பரிசோதனைகளை அதிகரிப்பது என பல்வேறு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இதில் ஆலோசிக்க பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.