கொரோனா நோயாளிகளை கட்டிப்போட்டு கொள்ளை – சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
கொரோனா நோயாளிகளை கட்டிப்போட்டு சென்னையில் நடந்த நகை கொள்ளை.
சென்னை தியாகராயநகரில் சாரதாம்பாள் எனும் தெருவில் உள்ள யாகூப் என்பவர் குடும்பத்தில் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பதால் அவர்கள் குடும்பத்துடன் வீட்டில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். இந்நிலையில் அவரது வீட்டில் அனைவரும் குடும்பத்தோடு அமர்ந்து பேசிக்கொண்டிருந்த பொழுது அங்கு வந்த மர்ம கும்பல் அனைவரையும் கட்டிப் போட்டு வீட்டில் இருந்த 95 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தையும், 250 சவரன் நகைகளையும் மற்றும் வீட்டு வாசலில் இருந்த கார் ஆகியவற்றையும் கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றுள்ளது.
இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் கடந்த சில தினங்களுக்கு முன்பு யாகூப்பின் வீட்டில் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் சேர்ந்த மொய்தீன் எனும் உறவினர்கள் என்பவர் தங்கி இருந்ததாகவும் அவர் இந்த வேலையைச் செய்திருக்கலாம் எனவும் சந்தேகத்தின் பேரில் கூறியுள்ளனர். கொரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்களை கட்டிப்போட்டு கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.