மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களை திட்டி, அவர்கள் மீது எச்சிலை துப்பிவிட்டு தப்பியோடிய கொரோனா நோயாளி.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால், தமிழக அரசு பல புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவாமனையில், தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிற நிலையில், சில கொரோனா நோயாளிகள் மிகவும் அலட்சிய போக்கான நிலையில் செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அறந்தாங்கியை சேர்ந்த கண்ணன் என்பவர், நேற்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று மதியம் அறந்தாங்கி, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் அங்கு அனுமதிக்கப்பட்டதில் இருந்து மருத்துவாமனை பணியாளர்களுடன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதனை தொடர்ந்து, நேற்று இரவு உணவு விளங்கும் போது, கொரோனா தடுப்பு கதவினுடைய கண்ணாடியை உடைந்து தகராறில் ஈடுபட்டுள்ளார். பின் கதவை திறந்து வெளியே வந்து, மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களை ஒருமையில் திட்டி, முக காவசத்தை கழற்றி விட்டு, எச்சிலை துப்பி விட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து, காவல்துறையினர் அவரை மீண்டும் மருத்துவமனையில் சேர்க்க முயற்சித்தனர். ஆனால், அவர் தனது மனைவியை வரவழைத்து, வண்டியில் ஏறி சென்றுள்ளார். பின் அவரது வீட்டின் அடையாளத்தை கண்டறிந்து, அவரை மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …