மருத்துவமனையில் இருந்தவர்கள் மீது எச்சிலை துப்ப்பிவிட்டு தப்பியோடிய கொரோனா நோயாளி…!

Default Image

மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களை திட்டி, அவர்கள் மீது எச்சிலை துப்பிவிட்டு தப்பியோடிய கொரோனா நோயாளி. 

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால், தமிழக அரசு பல புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவாமனையில், தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிற நிலையில், சில கொரோனா நோயாளிகள் மிகவும் அலட்சிய போக்கான நிலையில் செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அறந்தாங்கியை சேர்ந்த கண்ணன் என்பவர், நேற்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று மதியம் அறந்தாங்கி, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அவர் அங்கு அனுமதிக்கப்பட்டதில் இருந்து மருத்துவாமனை பணியாளர்களுடன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதனை தொடர்ந்து, நேற்று இரவு உணவு விளங்கும் போது, கொரோனா தடுப்பு கதவினுடைய கண்ணாடியை உடைந்து தகராறில் ஈடுபட்டுள்ளார். பின் கதவை திறந்து வெளியே வந்து, மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களை ஒருமையில் திட்டி, முக காவசத்தை கழற்றி விட்டு, எச்சிலை துப்பி விட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து, காவல்துறையினர் அவரை மீண்டும் மருத்துவமனையில் சேர்க்க முயற்சித்தனர். ஆனால், அவர் தனது மனைவியை வரவழைத்து, வண்டியில் ஏறி சென்றுள்ளார். பின் அவரது வீட்டின் அடையாளத்தை கண்டறிந்து, அவரை மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்