கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளி தப்பியோடிய நிலையில், அந்த வழக்கின் முன்னேற்றம் குறித்து பூக்கடை காவல் நிலைய ஆய்வாளர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
சென்னையில் உள்ள ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனவால் பாதிக்கப்பட்ட 74 வயது நபர் சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த முதியவர், கடந்த சில தினங்களுக்கு முன், அங்கிருந்து தப்பித்து வெளியே சென்றார்.
அந்த முதியவர் காணமால் போனதை அறிந்த அவரின் மகன், தனது தந்தையை கண்டுபிடித்து தருமாறு பூக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் பூக்கடை காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து, அந்த முதியவரை தேடி வந்தனர்.
இந்நிலையில், முதியவர் தப்பி சென்ற வழக்கில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து பூக்கடை காவல் நிலைய ஆய்வாளர் நாளை பதிலளிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவளித்துள்ளது. மேலும், கொரோனா நோயாளிகளை சிறப்பு கவனம் செலுத்தி பாதுகாக்க வேண்டியது, அரசாங்கத்தின் கடமை எனவும் தெரிவித்துள்ளது.
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…