விழுப்புரத்தில் கொரோனா நோயாளி தப்பி ஓட்டம்.!

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொரோனா நோயாளி தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 6-ம் தேதி கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இன்று தொற்று உறுதியான நிலையில் பரிசோதனை முடிவு வெளியாவதற்கு முன்பே ஓடிவிட்டார்.
தமிழகத்தில் இன்று மேலும் 48 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் சற்று மணி நேரத்திற்கு முன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
ஏற்கனவே கொரோனாவால் 690 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் மேலும் 48 பேருக்கு கொரோனா உறுதியானதால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 738 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் இன்று கொரோனாவால் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து உயிரிழப்பு 8 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 21 பேர் குணமடைந்துள்ளனர் என தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025