தமிழகத்தில் கொரோனாவால் 3,5 வயது சிறுமிகள் உட்பட ஒரே நாளில் 97 பேர் பலி!

Published by
Surya

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக, கொரோனாவால் இன்று ஒரே நாளில் 97 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் 5,864 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,39,978 ஆக அதிகரித்துள்ளது.

இதில் அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 1,175 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 98,767 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று அறியலூரை சேர்ந்த 5 வயது சிறுமி மற்றும் நாகையை சேர்ந்த 3 வயது சிறுமி உட்பட ஒரே நாளில் 97 பேர் உயிரிழந்ததால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,741 ஆக உயர்ந்துள்ளது. இதில் 50 வயதிற்குப்பட்ட 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று உயிரிழந்த 82 பேரில், தனியார் மருத்துவமனையில் 32 பேரும், அரசு மருத்துவமனையில் 65 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து 61-ம் நாளாக இரட்டை இலக்கை எட்டியுள்ளது.

இன்று உயிரிழந்தோரில் கொரோனா மட்டுமின்றி, மற்ற நோயால் பாதிக்கப்பட்ட 89 பேர் உயிரிழந்துள்ளதாகவும், தமிழகத்தில் கொரோனவால் மட்டும் பாதிக்கப்பட்ட 8 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.

அதில் அதிகபட்சமாக, சென்னையில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,092 ஆக உயர்ந்துள்ளது. இதில், சென்னைக்கு அடுத்தபடியாக, செங்கல்பட்டில் 246  பெரும், மதுரையில் 233 பேரும், திருவள்ளூரில் 229 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

மேலும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,677 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இந்த மாவட்டங்களை தவிர, மற்ற மாவட்டங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,064 ஆக அதிகரித்தது. இதனால் மற்ற மாவட்டங்களில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது.

Published by
Surya

Recent Posts

அதிமுக – பாஜக கூட்டணி : “இனி யாரும் பேசாதீங்க..,” கட்சி நிர்வாகிகளுக்கு கடிவாளம் போட்ட இபிஎஸ்?

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…

29 minutes ago

“எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!” நயினார் நாகேந்திரன் பேச்சு!

"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…

54 minutes ago

3வது வெற்றியை பதிவு செய்த மும்பை.! ஐதராபாத் அணிக்கு 5வது தோல்வி..,

மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…

9 hours ago

ரன் அடிக்க திணறிய ஹைதராபாத்.! பவுலிங்கில் மிரட்டிய மும்பைக்கு இது தான் இலக்கு.!

மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…

11 hours ago

வெற்றி யாருக்கு.? மும்பை அணி பௌலிங் தேர்வு.., பேட்டிங் செய்யும் ஹைதராபாத்.!

மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…

13 hours ago

ரேஸிங்கில் தீவிரம் காட்டும் அஜித் குமார்.! தீவிர பயிற்சி வீடியோ…,

பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…

13 hours ago