தமிழகத்தில் கொரோனாவால் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 88 பேர் உயிரிழந்ததால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,403 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் 4,807 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,65,714 ஆக அதிகரித்துள்ளது.
இதில் அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 1,219 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 84,598 ஆக அதிகரித்துள்ளது.
அதுமட்டுமின்றி, தமிழகத்தில் தொடர்ந்து 18 ஆம் நாளாக கொரோனவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 60-ஐ கடந்துள்ளது. இன்று இதுவரை இல்லாத அவளாக ஒரே நாளில் 88 பேர் உயிரிழந்ததால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,403 ஆக உயர்ந்துளளது. இதில் தனியார் மருத்துவமனையில் 24 பேரும், அரசு மருத்துவமனையில் 64 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று உயிரிழந்தோரில் கொரோனா மட்டுமின்றி, மற்ற நோயால் பாதிக்கப்பட்ட 82 பேர் உயிரிழந்துள்ளதாகவும், தமிழகத்தில் கொரோனவால் மட்டும் பாதிக்கப்பட்ட 6 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் விகிதம் 1.45 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இன்று உயிரிழந்தோரில் அதிகபட்சமாக, சென்னையில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,407 ஆக உயர்ந்துள்ளது. அதற்க்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 186 பெரும், திருவள்ளூரில் 154 பெரும், மதுரையில் 147 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் 49 ஆம் நாளாக தொடர்ந்து இரட்டை இலக்கை எட்டியுள்ளது. மேலும், சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் இன்று ஒரே நாளில் 996 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மற்ற மாவட்டங்களில் கொரோனவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலினிடம் அதானியுடன் தமிழக முதலவர் சந்திப்பு நிகழ்ந்ததா என்பது குறித்து விளக்கம்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்காக நடைபெற்று வரும் மெகா ஏலத்தின் இரண்டாம் நாள் இன்று தொடங்கியுள்ளது. இந்த ஏலத்தில் தொடக்கமே…
இந்நிலையில், வரவிருக்கும் நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது? காற்றழுத்த தாழ்வின் நிலை என்ன என்பது குறித்து வானிலை…
சென்னை : சர்வதேச அளவில், இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் பல…
சென்னை :சட்டுனு ஒரு சைடு டிஷ் வேணுமா?. அப்போ இந்த புளி மிளகாய் ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.. தேவையான…
ஏலான் மஸ்க் எப்போதுமே தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் எதாவது பதிவு ஒன்றை வெளியிட்டு பயனர்களுடன் கலகலப்பாக பேசுவதை வழக்கமான…