கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கின்ற வகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மக்கள் ஊரடங்குக்கு பிரதமர் நரேந்திரமோடி நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.பிரதமரின் இந்த வேண்டுகோளுக்கு மாநில அரசுகள், திரைப்பட நட்சத்திரங்கள் என பல தரப்பினரும் ஆதரவு கரம் நீட்டிய உள்ளனர். இதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை இன்று மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் ஆர்.கிர்லோஷ்குமார், அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்களுக்கு ஒரு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார் அதில் ,மக்கள் ஊரடங்கு தொடர்பாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை கமிஷனர் தனக்கு உள்ள அதிகாரத்தை கொண்டு, தேவையான அறிவுறுத்தல்களை டாஸ்மாக் மேலாண்மை இயக்குனருக்கு பிறப்பிக்குமாறு தமிழக அரசு அண்மையில் உத்தரப்பிறப்பித்தது. இதனைத் தொடர்ந்து மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை கமிஷனர், ‘எப்.எல்.-1’, ‘எப்.எல்.-11’ உரிமம் பெற்ற டாஸ்மாக் மது விற்பனை கடைகளை மூடுமாறு உத்தரவிட்டார். எனவே அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்கள் மற்றும் மாவட்ட மேலாளர்கள் டாஸ்மாக் மதுக்கடைகளை இன்று அடைக்குமாறு தனது சுற்றறிக்கையில் அறிவுறுத்தியதை அடுத்து இன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மது கடைகளும் மூடப்பட்டுள்ளது.
திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
திருச்சி : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு, தவெக மாநாடு என தமிழக அரசியல் வட்டாரத்தில் கூட்டணி ஆட்சி குறித்தும்,…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கிக்கொண்டு இருக்கும் நிலையில், இன்று (நவம்பர்5)…
திருச்சி : வரும் டிசம்பர் மாதம் 6ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவுகளை முன்னிட்டு சென்னையில் ஓர் புத்தக வெளியீட்டு…
மும்பை : இந்திய அணி, வரும் நவ-22ம் தேதி முதல் ஆஸ்திரேலிய அணியுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள்…