உலகம் முழுவது தனது கோர பிடியில் சிக்க வைத்துள்ள கொடிய உயிர்கொல்லி நோயான கொரோனா வைரஸ் தொற்றின் காரணமகாக உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நோய் பாதிப்பு உடையவர்களை தனிமைப்படுத்தி சிறப்பான மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இதுவரை தமிழகத்தில் 2323 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதில் 1258 பேர் இந்த தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்துள்ளனர், இதன் தாக்கம் காரணமாக 28 பேர் வரை உயிரிழந்துள்ளனர். எனினும் தமிழகத்தில் தரமான மருத்துவ சிகிச்சை வழங்கி நோய் பாதித்த அதிகமானோரை குணப்படுத்தி வீடுகளுக்கு அனுப்பி வருகிறது. அந்த வகையில் இந்திய அளவில் கொரோனா பாதித்த அதிகமானோரை குணப்படுத்திய மாநிலம் என்ற வரிசையில் தமிழகத்திற்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது. இதன் ஒரு நிகழ்வாக திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் கொரோனாவில் இருந்து குணமடைந்த 6 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். நெல்லை, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த தலா 3 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.
சென்னை : வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மிதமானது முதல் கனமழை…
டெல்லி : ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. அங்கு மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 15…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதேநேரம், வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஆங்காங்கே பெய்து வருகிறது. அதேநேரம், வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு…
சீனா : ஜுஹாய் நகரில் உள்ள விளையாட்டு மையத்தில் தினமும் பலர் உடற்பயிற்சி செய்து வருவது வழக்கம். அப்படி தான்…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே, வானிலை…