நாட்டையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்தான் திமுக.! அதிமுக அமைச்சர் விமர்சனம்.!
- தமிழ்நாடு குத்துச்சண்டை அசோசியேஷன் சார்பில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
- பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்தான் திமுகவினர் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு குத்துச்சண்டை அசோசியேஷன் சார்பில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டு, குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார். இதனிடையே அமைச்சர் ஜெயக்குமார் குத்துச்சண்டை பயிற்சியாளருடன், சண்டை போடுவது போல் ஜாலியாக மல்லுகட்டிய காட்சிகளை, மற்ற வீரர்கள் பார்த்து சிரித்தபடி ரசித்தனர்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், சிறுவயதில் இருந்தே குத்துச்சண்டை மீதிருந்த ஆர்வம் தான், தற்போது வெளிப்பட்டதாக தெரிவித்தார். மேலும், டிஎன்பிஎஸ்சி முறைகேடு விவகாரத்தில் ஒருசில இடங்களில் நடந்ததை வைத்து சந்தேகம் எழுப்பக்கூடாது என்று கூறிய ஜெயக்குமார், இந்தியாவை ஊழல் மூலம் தலைகுனிய வைத்தவர்கள் திமுகவினர் தான் என்றும் குற்றம்சாட்டினார். பின்னர் கொரோனா வைரஸ் பற்றி பேசிய அவர், நாட்டையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்தான் திமுகவினர் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.