தமிழகத்தில் இதுவரை 2,757 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியான நிலையில், சென்னையில் தான் பாதிப்பு அதிகமாக ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளதால், 3 ம் கட்ட ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாளையுடன் முடிவடைய ஊரடங்கு மே 17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுபோல் தமிழகத்திலும் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருகிறது. இதனால் மேலும் 2 வாரங்களுக்கு அதாவது மத்திய அறிவித்தபடி மே 17 வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.
இந்நிலையில், தமிழகத்தில் இன்று மேலும் 231 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 2757 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் சென்னையில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று மட்டும் 174 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அங்கு மொத்தம் எண்ணிக்கை 1,257 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து கோவையில் இதுவரை 142 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து திருப்பூரில் 114, செங்கல்பட்டில் 90, மதுரையில் 88, திண்டுக்கல்லில் 81, திருவள்ளூரில் 68, திருநெல்வேலி 63 போன்ற மாவட்டங்களில் அதிகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னைக்கு அடுப்படியாக இன்று அரியலூரில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அங்கு பாதிப்பு 26 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், தஞ்சாவூர். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,…
பாகிஸ்தான் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான், 50…
சென்னை : சீமான் மீதான பாலியல் புகார் வழக்கில் நேரில் ஆஜராகுமாறு, அவரது சென்னை இல்லத்தில் போலீஸ் சம்மன் ஒட்டினர்.…
சென்னை : பழம்பெரும் பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ், வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைபாடுகள் காரணமாக சென்னையில் மருத்துவமனையில்…
சென்னை : நடிகை வழக்கில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரில் ஆஜராகவில்லை என்று சென்னை வளசரவாக்கம் போலீசார்,…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான 9வது போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டி பகுதியில்…