கொரோனா தான் எதிரியே தவிர கொரோனா நோயாளிகள் அல்ல – முக ஸ்டாலின்
டெல்லியில் உள்ள நிஜாமுதீன் பகுதியில் கடந்த மாதம் 8 முதல் 20 ம் தேதி வரை தப்லிகி ஜமாத் என்ற இஸ்லாமிய மத அமைப்பு சார்பில் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த இஸ்லாமியர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் பங்கேற்று ஊர் திரும்பிய பலருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில், இதனால் இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 3374 ஆக உயர்ந்துள்ளது.
அந்த வகையில் தமிழகத்தில் கொரோனாவால் 485 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், அதில் 422 பேர் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பியவர்கள் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்திருந்தார். இதன் விளைவு காரணமாக டெல்லி சென்று திரும்பியவர்கள் தாமாகவே முன்வந்து சுய பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டனர். இதனால் பல்வேறு சர்ச்சையான பேச்சுக்கள் இணையத்தில் கிளம்பியது. இதனை கண்டித்து தமிழக முதல்வர் பழனிசாமி கொரோனாவுக்கு சாதி மதம் கிடையாது. இது ஒரு நோய் என்றும் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் என தெரிவித்தார்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்கத்தின்போது மக்களின் உயிரை பணயம் வைத்து மலிவான அரசியல் செய்வோரை ஒதுக்கித் தள்ளுங்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் கொரோனாவுக்கு சாதி, மத பேதம் கிடையாது என்றும் மதச்சாயம் பூச வேண்டாம் என கூறியுள்ளார். கொரோனா தொற்று தான் எதிரியே தவிர கொரோனா நோயாளிகள் அல்ல என அவர் தெரிய்வித்துள்ளார்.