கொரோனா பரவல் சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
தற்போது இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் இன்புளூயன்சா மற்றும் கொரோனா வைரஸ்காய்ச்சல் தற்போது அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.
கொரோனா பாதிப்பு :
இந்த வைரஸ் காய்ச்சல் பரவல் குறித்து தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்தியா முழுதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 500 என்ற எண்ணிக்கையில் உள்ளது. இதனால், மத்திய அரசு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இருக்க வலியுறுத்தியுள்ளது என்று குறிப்பிட்டார்.
இன்புளூயன்சா காய்ச்சல் :
மேலும் , இன்புளூயன்சா காய்ச்சலும் அதிகமாக பரவி வருவதால்,நேற்று 1000 இடங்களில் முகாம் நடத்த திட்டமிட்டு 1586 காய்ச்சல் முகாம்கள் நாடுமுழுவதும் நடைபெற்றது. நேற்று மட்டும் தமிழகத்தில் 2,263 இன்புளூயன்சா காய்ச்சல் கண்டறியபட்டுள்ளது. இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை எடுத்துக்கொள்வதோடு, தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் எனவும், குறிப்பிட்டார்.
திருச்சி இளைஞர் மரணம் :
மேலும், 300 நடமாடும் மருத்துவமனைகள் மூலம் மலை கிராமங்களில் காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டது என குறிப்பிட்டார். அடுத்ததாக, திருச்சியை சேர்ந்த 27 வயது இளைஞர் இறந்ததற்கு அமைச்சர் விளக்கம் கூறினார். அவர் கூறுகையில், அந்த இளைஞர், பெங்களூருவில் வசித்து வந்தவர். சிறிது நாள் முன்னர் கோவா சென்றுள்ளார். அங்கு அவர் உடல் நிலை மோசமாகி உள்ளது. உடனே சொந்த ஊர் திருச்சி வந்து ஓர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் தான் அவர் உயிரிழந்துள்ளார் எனவும்,
தற்போது அவரது மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அவை மருத்துவ ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அந்த முடிவுகள் வந்த பிறகு தான் காய்ச்சலுடன் சேர்த்து எந்தெந்த இணை நோய்கள் அவருக்கு இருந்தது என கண்டறிய முடியும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.
சென்னை : இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளியான இந்தியன் 2 படம் படுதோல்வியை சந்தித்திருந்த நிலையில், அடுத்ததாக கம்பேக் கொடுக்கும்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக உயர்ந்து காணப்படுகிறது. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.200 உயர்ந்திருக்கிறது.…
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றயை நிகழ்வுகளில் பங்கேற்க வந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், 'இவன்தான் அந்த சார்' என அண்ணா…
சென்னை: விஜயின் தமிழக வெற்றிக்கழக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் சென்னை பனையூர் அலுவலகத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில்…
சென்னை: பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சில கருத்துகளை தெரிவித்து இருந்தார். இது தற்போது அரசியல்…
சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சனுக்கு அணியில் விளையாட வாய்ப்புகள் சரியாக வழங்கப்படாதது ஒரு பெரிய கேள்விக்குறியான…