வால்பாறையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று! ஒரு நாளைக்கு 400 வாகனங்களுக்கு மேல் அனுமதி மறுப்பு!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாதிப்பை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் குறைந்தபாடில்லை. கடந்த சில மாதங்களாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பிரபல சுற்றுலா தளங்களில் ஒன்றான வால்பாறையில், சுற்றுலாவுக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா தொற்றும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இதனையடுத்து, வால்பாறைக்கு பிற மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வால்பாறையில் கொரோனா அதிகரிப்பதால் ஒரு நாளைக்கு 400 வாகனங்களுக்கு மேல் அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.