கொரோனா பாதிப்பு…வீட்டில் இருந்து மருத்துவ ஆலோசனை – தொலைபேசி எண்கள் அறிவிப்பு!

Default Image

சென்னை:கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டுத் தனிமையில் உள்ளவர்கள் மருத்துவ ஆலோசனை பெறும் வகையில்,தொலைபேசி எண்களை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலானது மீண்டும் அதிகரித்தும் வருகிறது.அதன்படி,தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,489 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.குறிப்பாக,கடந்த ஒரே நாளில் சென்னையில் மட்டும் 682 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில்,சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 10 நாட்களில் 250% ஆக அதிகரித்துள்ளதாக கூறப்படும் நிலையில்,சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகளுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.சென்னையில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கேர் சென்டரை அதிகரிப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில்,சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டுத் தனிமையில் உள்ளவர்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் பெற உதவியாக தொலைப்பேசி எண்களை சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக,அவர் கூறுகையில்:”சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டுத் தனிமையில் உள்ளவர்களுக்கு தொலைபேசியில் மருத்துவ ஆலோசனை வழங்க மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி,கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டுத் தனிமையில் உள்ளவர்கள் மருத்துவ ஆலோசனைகள் பெற 044-25384520, 044-46122300 என்ற தொலைப்பேசி எண்களை தொடர்புக் கொண்டு மருத்துவர்களிடம் ஆலோசனை பெறலாம்”,என்று கூறியுள்ளார்.

மேலும்,பொதுமக்கள் முகக்கவசம் அணியவில்லை என்றால் அடுத்த 10 நாட்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்