கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டவர் உயிரிழப்பு…!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டவர் உயிரிழப்பு.
சென்னை திருவல்லிக்கேணியில், வி.ஆர்.பிள்ளை தெருவை சேர்ந்த 39 வயதான ஆண் நபர் ஒருவருக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதியான நிலையில், தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். இவருக்கு நேற்று இரவு 10:30 மணியளவில் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இவரது உயிர் பிரிந்துள்ளது. இது அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், உயிரிழந்தவரின் சடலம் பிய்த்த பரிசோதனைக்காக, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லபட்டுள்ளது.