நெல்லை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த முறை பொதுமக்கள் நல்ல முறையில் ஒத்துழைப்பு வழங்கினார்கள்.
தமிழகத்தில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக தமிழகம் முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது ஊரடங்கு தொடர்பாக மருத்துவ நண்பர்களுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள், சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர் நெல்லை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த முறை பொதுமக்கள் நல்ல முறையில் ஒத்துழைப்பு வழங்கினார்கள். இந்த முறை கூடுதலாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், இதன் மூலம் கொரோனா தொற்றின் பாதிப்பை வேகமாக குறைக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆய்வகங்களில் கூடுதலாக பாசிட்டிவ் என பரிசோதனை முடிவுகள் வந்தாலும், பாசிட்டிவ் இல்லை என்று பரிசோதனை முடிவுகள் வந்தாலும் இதுகுறித்து தணிக்கை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், அத்தியாவசிய பணியில் இருக்கும் ஆட்டோ ஓட்டுனர்கள் போன்றவர்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களு முன்னுரிமை அளிக்கப்பட்டு தடுப்பூசி போடப்படும் என்றும், தடுப்பூசிகள் கூடுதலாக வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நெல்லை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான அமரன் திரைப்படம் வெளியாகி 3-வது வாரமாக பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. படத்திற்கு…
சென்னை : இன்று கார்த்திகை மாதம் முதல் தேதியை முன்னிட்டு சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து தங்கள் விரத…
சென்னை : இளம் தமிழ் இயக்குனர் சுரேஷ் சங்கையா காலமானார். உடல் நலம் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த அவர், நேற்று (வெள்ளிக்கிழமை)…
சென்னை : தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் பட்டியல் திருத்துவதற்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமையும் முகாம் நடைபெறவுள்ளது.…
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
சென்னை : கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள ஐயப்பனுக்கு உகந்த கார்த்திகை மாதம் இன்று (16.11.2024) முதல்…