தமிழகத்தில் மின்னல் வேகத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று..!

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் முழுவதும், 23,989 பேருக்கு கொரோனா தொற்று செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தமிழகம் முழுவதும் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் முழுவதும், 23,989 பேருக்கு கொரோனா தொற்று செய்யப்பட்டுள்ள நிலையில், 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10,988 பேர் கொரோனாவிலிருந்து நலம் பெற்றுள்ள நிலையில், 1,18,017 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.