சென்னை மருத்துவமனையில் கொரோனா தொற்று உறுதியான கர்ப்பிணி பெண் மாயம்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தற்போது தொற்று பாதிப்பை கட்டுப்படுத்தும் வண்ணம் தற்போது தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதோடு, புதிய கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், திருமுல்லைவாயில் பகுதியை சேர்ந்த 7 மாத கர்ப்பிணி ஒருவர் கடந்த 4ஆம் தேதி உடல் நல குறைவு ஏற்பட்டதை அடுத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நேற்று தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இதனையடுத்து அவருக்கு ஓமைக்ரான் தொற்று உள்ளதா என பரிசோதனை செய்ய வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை அந்த கர்ப்பிணி காணாமல் போயுள்ளார். ஊழியர்கள் அவரை தேடியும் கிடைக்காத நிலையில் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அவரது முகவரியை வைத்து காவல் துறையினர் கர்ப்பிணியை தேடி வருகின்றனர்.
சென்னை -90 கிட்ஸ்க்கு பிடித்த பெட்டிக்கடை தேன் மிட்டாய் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என இந்த செய்தி…
திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
திருச்சி : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு, தவெக மாநாடு என தமிழக அரசியல் வட்டாரத்தில் கூட்டணி ஆட்சி குறித்தும்,…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கிக்கொண்டு இருக்கும் நிலையில், இன்று (நவம்பர்5)…
திருச்சி : வரும் டிசம்பர் மாதம் 6ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவுகளை முன்னிட்டு சென்னையில் ஓர் புத்தக வெளியீட்டு…